Friday, January 29, 2010

Some Good Funds

Some friends keep asking what are some of the good funds to invest from a long term point of view. From my personal experience and based on reliable research reports and the performance of the funds, I would recommend SIP in equal monthly instalments based on one's investing potential:
Reliance Growth
HDFC Top 200
HDFC Prudence

Happy Investing

Saturday, May 17, 2008

SIP முதலிடு செய்த திட்டத்தின் எஃன்ஏவி குறைகிறதே?

மியூச்சுவல் ஃப்ண்ட்டில் டைவர்சிஃபைட் ஃப்ண்டில் SIP முறையில் முதலீடு செய்த திட்டங்களின் எஃன்ஏவி தொடர்ந்து சரிகிறதே என்று கவலையாக இருக்கிறதா, போட்ட பணம் மட்டும் இனி கட்டப் போகும் தவணைகள் என்னவாகும் என்றெல்லாம் யோசிக்கிறிர்களா. கவலை வேண்டாம், நீங்கள் தனித்து புலம்புபவர் அல்ல,ஒரு பெரிய முதலீட்டாளர் சமுதாயமே உங்கள் கவலையை பகிர்நது கொண்டு இருக்கிறது.



சுமார் 4-5 மாதங்கள் முன் வறை SIP பற்றி தாரை தம்பட்டம் அடித்தவர்க்ளை எல்லாம் இப்பொழுது ஆள் வைத்து தேடினால் கூட கிடைக்க மாட்டார்கள்.



சரி என்ன செய்வது, ஃப்ண்டில் இருந்து ரிடீம் செய்து விடலாமா,அல்லது குறைந்த பட்சம் தவணை கட்டுவதை நிறுத்தி விடலாமா என்றெல்லாம் யோசித்திருப்பீர்கள். தயவு செய்து அவசரப் பட்டு தவறான முடிவு எடுக்க வேண்டாம்.எந்த முடிவும் எடுக்கும் முன் கிழெ குறிப்பிடுள்ள ஒரு சில குறிப்புகளை மனதில் வைக்குமாரு கேட்டுக்கொள்கிறென்.




1.முதலீட்டின் அடிப்படை நோக்கம்.



நாம் எதற்காக இந்த முதலீட்டை மேற்கொண்டொம்? போட்ட பணம் ஆறு மாதத்திற்க்குள் இரட்டிப்பாவதற்காகவா அல்லது போட போட லாபம் மட்டுமே வேண்டும் என்ற நோக்கத்துடனா?அல்லது மீயுசுவல் ஃப்ண்ட் என்பது பங்கு சந்தை மூலம் பணத்தை கொட்டும் அமுத சுரபி என்ற தவறான எண்ணத்திலா. உங்களின் முதலீட்டின் நோக்கம் மேலே குறிப்பிட்டுள்ள சிலதாக இருந்தால் தயவு செய்து ரிடீம் செய்து வெளியே வந்து விடுங்கள்.

முதலீடு என்பது நீண்ட கால அடிப்படையில் நாம் போடும் பணத்தை பெருக்குவது அல்லது நம்முடைய நீண்ட கால பொருளாதார கனவுகளை நிறைவேற்ற, மட்டும் நம் மூதலீட்டின் இலக்கை அடைவதற்கு ஒரு முக்கிய யுக்தி.அது பயனுள்ள யுக்தியாய் அமைய நமக்குத் தேவை பொறுமை,கட்டுப்பாடு மட்டும் திடமான முடிவு எடுப்பதற்கான துணிச்சல்.


2.SIP முதலீட்டின் சாரம்சம்


SIP முறையில் முதலீடு என்பதின் பங்கு சந்தை எப்பொழுதும் ஒரெ திசையில் பயணிக்காது,எற்றம் இறக்கம் என்பது தவிற்க முடியாதது,மட்டும் சந்தை எப்படி செல்லும் என்பதை யூகிக்க முடியாது,அதே சமயம் தவணை முறையில் நம் முதலீடு செய்தொம் என்றால் நம்முடைய முத்லீடு சந்தையின் எற்ற இறக்கத்துக்கு எற்ப சரி சமமாகி நீண்ட கால அடிப்படையில் நல்ல தொரு பயனிட்டை அளிக்கும் என்ற நம்பிக்கையில் தான்.

கடந்த ஜனவரி 21 க்குப் பிறகு அனைத்து முயூசுவல் ஃப்ண்ட் திட்டங்களின் எஃன் ஏ வி யும் மிகவும் குறைந்து உள்ளது,அதே சமயம் நாம் இந்த கால கட்டங்களில் செலுத்திய SIP முறையில் ஆன தவணைகளுக்கு அதிகப்படியான யூனிட்கள் நமக்கு கிடைத்து இருக்கும்.தாற்காலிகமாக நமது சந்தை மதிப்பு குறைந்து இருந்தாலும், ஒரு 3-4 வருட அடிப்படையில் இந்த காலகட்டத்தில் நாம் செய்த தவணை முறை முதலீடுகளுக்கு நல்ல பலன் கிடைக்கும்.


பணம் போட போட எஃன் ஏ வி ஏறிக்கொண்டு மட்டுமே இருக்கும் என்ற எண்ணத்துடன் முதலீடு செய்தொம் என்றால் நமக்கு SIP முறையில் முதலீடு செய்ய தேவை இல்லை,மொத்த ரொக்கமாகவே முதலீடு செய்யலாமே.

அது மட்டுமின்றி SIP முறை முதலீடு ஒரு தவணை முறையில் நம்மை ஒரு கட்டாய சேமிப்பு செய்ய தூண்டுகிறது





3.முதலீடு செய்த ஃப்ண்டின் வருமானச் செயல்பாடுகள்


நாம் முதலீடு செய்த ஃப்ண்டின் வருமானச் செயல்பாடுகள் மிக முக்கியமானது.அதே சமயம் வருமான செயல்பாடுகளை கடந்த 3-5 வருடம் என்ற கால வறை, மட்டும் ஃப்ண்டின் தொடக்கதிலிருந்து தற்சமயம் வறை என்ற கால கட்டத்துக்குள் பார்க்க வேண்டும். அப்பொழுது நமக்கு ஃப்ண்டின் நீண்ட கால செயல்பாடுகள் குறித்து கணிக்க முடியும்.இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து தற்சமயம் வறை பல ஃப்ண்டுகளின் வருமானம் சரிந்தே காணப்படுகிறது அகையால் கடந்த 4-5 மாத வருமான செயல்பாடுகளை வைத்து நாம் கணித்தால் அது தவறான கணிப்பாகும்.

நாம் முதலீடு செய்த ஃப்ண்ட் NFO வகை ஃப்ண்டாக இருந்தால் மேலே குறிப்பிட்டுள்ளவைகள் அதற்குப் பொருந்தாது.

    4.பிற ஃப்ண்டுகளின் செயல்பாடு

    நமது ஃப்ண்டின் வருமான செயல்பாடுகளை இதறக்கு சமமான மற்ற ஃப்ண்ட் திட்டங்களுடன் ஒப்பிட்டு பார்தது, இந்த கால கட்டங்களில் அவற்றுடைய செயல்பாடுகளுடன் எந்த அளவுக்கு சிறந்து அல்லது தாழ்ந்து இருக்கிறது என்று பார்த்தோமானல் நமக்கு நம்முடைய ஃப்ண்ட் ப்ற்றிய ஒரு சில முக்கியமான கணிப்பை தெரிந்து கொள்ளலாம். ஒரு சில காரணங்களுக்காக நாம் ஃப்ண்டை விட்டு வெளியே வரவோ அல்லது வேற ஃப்ண்டின் திட்டத்துக்கு மாறுவதற்கோ இத்தகைய தகவலகள் நமக்கு உபயோகமாக இருக்கும்.

    5.ஃப்ண்ட் மானேஜரின் செயல்பாடு

    ஒரு ஃப்ண்டிற்கு திறமையான மற்றும் அனுபவசாலியான ஃப்ண்ட் மானேஜர் இருப்பது இத்தகைய கால கட்டங்களில் மிக முக்யமானது. நமது ஃப்ண்ட் மானேஜர் அத்தகைய நபராக இருந்தால் நமக்கு கவலை வேண்டாம். ஏனென்றால் திறமைசாலியான ஃப்ண்ட் மானேஜர் எத்தகைய சூழ்நிலையையும் சமாளிப்பார்கள். தேவைப்பட்டால் ஃப்ண்டின் போர்ட்ஃபோலியோவை மாற்றி அமைக்கவும் தயங்க மாட்டாற்கள்

    ஃப்ண்டின் மானேஜர் அத்தகைய அனுபவசாலியோ அல்லது திறமைசாலியோ அல்ல என்பது நமக்கு தெறிய வந்தால், அல்லது நாம் முதலீடு செய்யும் முன் இதை கவனிக்காமல் விட்டு இருந்தோமானல் இப்பொழுது ஃப்ண்டை விட்டு ரிடீம் செய்வதோ அல்லது வேற ஃப்ண்டிற்க்கு மாறவோ செய்யலாம்.

    6. தவறான முதலீடு

    நாம் ம்ற்றவர்களின் தவறான ஊந்துதலின்( தரகற்கள் அல்லது நண்பற்கள் அல்லது உற்றார் உறவினற் என்ற போர்வையில் சுற்றும் இடை தரகற்கள்) பேரின் மேலே குறிப்பிட்டுள்ள 5 அம்சங்களை எல்லாம் யோசிக்காமல் மூதலிடு செய்திருந்தோமானல், இந்த காலகட்டத்தில் மாற்று முடிவை எடுக்கும் கட்டாயத்திற்கு தள்ளபட்டுவிடுவோம்.

    நம்முடைய பணத்திற்கு நாமே பொறுப்பு எற்போம். யோசித்து முடிவு எடுப்போம்.